விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் ெமத்தனம் நீடித்தால் போராட்டம்

திருத்துறைப்பூண்டி, நவ.5: விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் மெத்தனம் தொடர்ந்தால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய ேபாராட்டம் நடைபெறும் என திமுக எம்எல்ஏ ஆடலரசன் கூறினார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் எம்எல்ஏ ஆடலரசன் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இருக்கக்கூடிய உரங்கள் விவசாயிகளுக்கு இன்னும் சரியாக வழங்கப்படாமல் இருக்கிறது. உரத்தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் குறைய கூடிய நிலை. அரசு உடனடியாக பொறுப்பேற்று விவசாயிகளுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். கிட்டதட்ட 27 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் நேரடி விதைப்பு பணிகளும், சுமார் 800 ஹெக்டர் நிலப்பரப்பில் நடவு பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் உரம் கொடுக்க வேண்டிய வேளாண்மைத் துறையும், கூட்டுறவு துறையும் மெத்தனம் காட்டிக்கொண்டு போட்டி போட்டுக் கொண்டு இந்த விவசாயிகளை வஞ்சித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

Related Stories: