சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் யோக கலை பயிற்சி முகாம்

சீர்காழி, நவ.1:நாகை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யோகம் தரும் யோகக் கலை நோயில்லா வாழ்வு வாழ வழிகாட்டும் வாழ்வியல் கலையான யோகக்கலை பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருந்தில்லா மருத்துவ முறையில் தனிப்பெறும் இடத்தைப் பெற்ற யோகக்கலை மனித இனத்தின் நெறிகாட்டல் கலையாக மாறியுள்ளதாலும், மாணவர்களின் அறிவொழுக்கத்திலும் நினைவாற்றல் தூண்டலிலும் பெரும்பங்கு வகிப்பதாலும் வளரும் தலைமுறைகள் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் என்பதால் பள்ளி நிர்வாகி ராதாகிருஷ்ணன் தலைமையில் 43 வருட அனுபவமிக்க சென்னை கிருஷ்ணாமாச்சார்ய யோக மந்திரம் அமைப்பின் மூலம் 5 நாட்கள் யோகக்கலை பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சியாளர்கள் சரவணகுமார் மற்றும் ஆனந்த கணேஷ் ஆகியோர் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அவரவர் வயதிற்கேற்ப ஆசனங்கள் செயல்முறையோடு நிகழ்த்தி பயிற்சி அளிக்கப்பட்டது. யோகக் கலையைப் பயிற்றுவித்த பயிற்சியாளர்களைப் பள்ளியின் நிர்வாகி, பள்ளி முதல்வர், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Related Stories: