பொதுமக்கள் கோரிக்கை நார்த்தாமலை பெண்ணுக்கு கால் எலும்பை கையில் பொருத்தி புதுகை அரசு மருத்துவர்கள் சாதனை

புதுக்கோட்டை, அக்.25: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தேவிகா(30), இவருக்கு இடது மணிக்கட்டின் அருகே கையில் திடீரென கட்டி ஒன்று வளர்ந்ததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 4ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு ஆஸ்டியோகிளாஸ்டோமா என்று சொல்லப்படும் எலும்பு புற்று நோய் இருப்பது தெரியவந்தது. புற்றுநோய் இருப்பதால் கை எலும்பினை அகற்ற வேண்டும் என்ற நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரதிராஜா, எலும்பு சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜ்மோகன், மயக்க மருத்துவர்கள் டேவிட், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்டகுழு அமைக்கப்பட்டது. இந்த மருத்துவ குழுவினர் அவருக்கு கடந்த17ம்தேதி தேதி அறுவை சிகிச்சை செய்து புற்று நோய் பாதிக்கப்பட்ட எலும்பு 10 செ.மீ அளவிற்கு வெட்டி எடுக்கப்பட்டது.

கை நன்றாக இயங்க வேண்டும் என்ற காரணத்தினால் இடது காலிலுள்ள பிபுலா எலும்பு அகற்றப்பட்டு பத்து செ.மீ அளவிற்கு அந்தகால் எலும்பு கையில் பொருத்தப்பட்டது. இப்பொழுது நோயாளி நலமாக உள்ளார். இதுபற்றி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம்

கூறியதாவது: இந்தஎலும்பு புற்றுநோய் எந்த வயதினருக்கும் வேண்டுமானாலும் வரலாம் எனவே புற்று நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவமனையை உடனே அணுக வேண்டும். கால் எலும்பினை எடுத்து கையில் பொருத்தி கைக்கு செயல்வடிவம் கொடுத்து இருப்பது மிகப் பெரியசாதனை அதுவும் மயக்க மருத்துவத்துறையானது அல்ட்ராசவுண்டு மூலம் நரம்புகளை செயலிழக்கச் செய்யும் ஒரு கருத்தரங்கை இந்த கல்லூரியில் நடத்தி யிருந்தது. அதுபோலவே அல்ட்ராசவுண்டு உதவிகொண்டு அந்த ஒரு பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ததும் மிகப்பெரிய சாதனையாகும். இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: