கடையநல்லூர் நகராட்சியில் இருந்து நெல்லை சிமென்ட் ஆலைக்கு மக்காத குப்பை அனுப்பி வைப்பு

கடையநல்லூர், அக். 25:   நெல்லை மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி, கடையநல்லூர். திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் நகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை பொருட்கள், பயன்படுத்தப்பட்ட மக்காத குப்பைகள் என சுமார் 3 டன் அளவிற்கு மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள் நெல்லை சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, சமூக ஆர்வலர் மைதீன், ராஜேந்திரபிரசாத் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: