பசு மாட்டின் இரைப்பையில் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவு : அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்

சென்னை: பசு மாட்டின் இரைப்பையில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரிடம் 6 வயதுள்ள பசுமாடு, தீவனம் உட்கொள்வதிலும், சாணம் மற்றும் சிறுநீர் கழிப்பதிலும் சிரமப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, பசுவை அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றார். அவரது பரிந்துரையின்படி, சென்னை கால்நடை மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி அனுமதித்தார்.
Advertising
Advertising

பசு மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், பசுவின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 18ம் தேதி பசு மாட்டிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை டாக்டர்கள் அகற்றினர். அத்துடன் ஊசி, ஊக்கு, ஆணி, திருகாணி, நாணயம் உட்பட பல ஆபத்தான பொருட்களும் அகற்றப்பட்டன. சிகிச்சைக்கு பின் தற்போது பசு தண்ணீர் அருந்தி, சாணம் மற்றும் சிறுநீர் கழித்து நல்ல உடல் நலத்துடன் உள்ளது. 

Related Stories: