ஓசூரில் பூக்கள் விலை வீழ்ச்சி

ஓசூர், அக்.18: ஓசூரில் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிகோட்டை, தளி, பாகலூர் ஆகிய பகுதிகள் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளை பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். ஓசூர் மற்றும் கர்நாடகாவில் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். நவராத்திரி பண்டிகை மற்றும் தசரா பண்டிகை முடிந்து விட்டதால், பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, விலையும் கணிசமாக குறைந்துள்ளது. தற்போது  மல்லிகைப்பூ கிலோ ₹300க்கும், கனகாம்பரம் ₹800க்கும், அரளிப்பூ ₹30க்கும், ரோஜா பூ ₹30க்கும், கரிஸ்மா ரோஸ் ₹15க்கும், வெள்ளை சாமந்தி ₹30க்கும், சம்பங்கி ₹20க்கும், சாமந்தி ₹25 என விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இன்று ஐப்பசி மாதத்தை யொட்டி திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் வரும் நாட்களில் பூக்களின் விலை உயரும் என்றனர்

Related Stories: