வரப்பு பயிர் சாகுபடி செய்வதால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆலோசனை

நீடாமங்கலம், அக்.17: வரப்பு பயிர் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்று நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.வரப்பு பயிர் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம் என நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.வட்டார வேளா ண்மை உதவி இயக்குனர் கூறுகையில், தற்போது சம்பா மற்றும் தாளடி பருவங்களில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல்பயிரின் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக வரப்பு பயிர் சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராக பயறுவகை பயிர்கள் (உளுந்து, துவரை) காய்கறி பயிரான வெண்டை சாகுபடி செய்வதன் மூலம் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. வரப்பு பயிர் சாகுபடி செய்வதால் வரப்பில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. வரப்பு பயிர் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றது. மேலும் மஞ்சள் நிறப் பூச்சிகளை தரக்கூடிய சூரியகாந்தி, சென்டிப்பூ பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் முதன்மை பயிரை தாக்கும் பூச்சிகள் கவரப்பட்டு முதன்மை பயிர் தாக்குதலை குறைக்கலாம். மேலும் இந்த பயிர்கள் கூடுதல் வருமானத்தை தந்து பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

காய்கறி பயிரான வெண்டை நமக்கு தேவையான காய்கறி உபரி வருமானம் தருகிறது என நீடாமங்கலம் வேளாண்மைம உதவி இயக்குனர் தெரிவித்தார். தஞ்சை வேளாண்மை கல்லுரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: