ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தில் பயிர்களை நாசமாக்கும் வனவிலங்குகள்

சேலம், அக்.15: ஆத்தூர் அடுத்த ராமநாயக்கன்பாளையம் பகுதியில், வனவிலங்குகள் விளை பயிர்களை நாசமாக்குவதை தடுக்க குழி அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள், கோரிக்கை வைத்துள்ளனர்.  

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ராம நாயக்கன்பாளையத்தில் வனகாப்புக்காட்டிற்கு அருகே பலர் விவசாயம் செய்து வருகிறோம். காப்புக்காட்டில் உள்ள வனவிலங்குள், அடிக்கடி விவசாய நிலத்திற்கு வந்து பயிர்களை நாசம் செய்கிறது. சில நேரங்களில், விவசாயிகள் மீதும் தாக்குகிறது. இதுபோன்ற வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பல இடங்களில், அரசு சார்பில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட விவசாய நிலத்தை சுற்றிலும் 3 அடி நீளம், 3 அடி ஆழம் மற்றும் 3 அடி அகலத்திற்கு, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு அகழி வெட்ட வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: