கத்தி முனையில் வழிப்பறி 5 பேர் சிறையில் அடைப்பு

சென்னை: வில்லிவாக்கம் பாரதி நகர் 2வது தெருவை  சேர்ந்த பழ வியாபாரி ராமசாமி (64) என்பவரை, கத்தி முனையில் மிரட்டி,  மூன்றரை சவரன் நகை, ₹10 ஆயிரத்தை பறித்துச் சென்ற அதே பகுதியை சேர்ந்த  தங்கவேல் (21), சக்திவேல்  (21), வீரவேல் (23), முரளி (22), கார்த்திக்  (23) ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

* கொடுங்கையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவனேஷ்வரன் (38), நேற்று பெரம்பூர் நெடுஞ்சாலையில் சவாரிக்காக காத்திருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர், இவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.
Advertising
Advertising

* அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பெரிய காலனி பஜனை கோயில் தெருவை சேர்ந்த அக்‌ஷையா (16) என்ற  10ம் வகுப்பு மாணவி, சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* திருத்தணி அடுத்த செருகனூர் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (20). அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (36) ஆகிய இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை  வாங்குவதற்காக கே.ஜி.கண்டிகை அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த லாரி பைக் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே   பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories: