டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பலி

சென்னை: திருத்தணி அடுத்த திருவாலங்காடு, மணவூர் அடுத்த மருதவல்லிபுரம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு நிஷாந்த் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த வாரம் நிஷாந்த் கடுமையான மர்ம  காய்ச்சலால் பெரிதும் அவதிப்பட்டான். இதையடுத்து அவனை பெற்றோர் திருவாலங்காட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு நிஷாந்த்தின் உடல்நிலை மோசமானதால், சென்னை போரூரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நிஷாந்த்தின் ரத்த பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு நிஷாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நிஷாந்த் பரிதாபமாக பலியானான்.

Advertising
Advertising

Related Stories: