வது மாடியிலிருந்து குதித்து மாநகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி

2தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் 2வது மாடியில் இருந்து குதித்து மாநகராட்சி ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொருக்குப்பேட்டை சிக்கந்தர் காலனியை சேர்ந்தவர் ஜான்சன் (46). மாநகராட்சி  துப்புரவு ஊழியர். இவரது இடதுகையில் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பல மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில்  வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்த ஜான்சன், இரவு வீட்டின் 2வது மாடிக்கு சென்று, திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது கை, கால், தலையில் பலத்த காயம்  ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, படுகாயமடைந்த ஜான்சனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertising
Advertising

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவரது 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  குடும்ப பிரச்னையில் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: