கல்மண்டபம் மார்க்கெட் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையால், மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த கடையை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்கள்  சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.  இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று மாலை கல்மண்டபம் மார்க்கெட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ராயபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம்  சமரசத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘இந்த டாஸ்மாக் கடையால் மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே,  இந்த கடையை உடனே மூட வேண்டும்,’’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: