சூளகிரி அருகே பொதுமக்களிடம் முருகன் எம்எல்ஏ குறைகேட்பு

சூளகிரி, அக்.1: சூளகிரி தாலுகா வரதராஜபுரம் பகுதியில் முருகன் எம்எல்ஏ சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அயர்னப்பள்ளி ஊராட்சி வரதராஜபுரம் பகுதியில் வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் ஆய்வு பணியில் ஈடுபட்டார். மேலும், அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கூறியதாவது:

கெலவரப்பள்ளி அணையில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு உபரிநீர் திறந்து விடப்படும்போது பாத்தக்கோட்டா, சாமனப்பள்ளி பகுதி வழியாக அலேசீபம், வரதராஜபுரம், மெட்டரையை கடந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்லும். எனவே, வரதராஜபுரத்தில் தடுப்பணை ஏற்படுத்தி தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுத்தால், இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, அப்பகுதிக்கு சென்று முருகன் எம்எல்ஏ பார்வையிட்டார். மேலும், தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். அப்போது, தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கேடேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: