விமானப்படை பயிற்றுநர் தேர்வு விழிப்புணர்வு முகாம்

ஊட்டி, செப். 25:    இந்திய விமானப்படை பயிற்றுநர் தேர்வு குறித்த விழிப்புணர்வு முகாமில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வடிவேல் கூறியிருப்பதாவது:வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் இந்திய விமான படையில் பயிற்றுநர் பணி தேர்வு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 28ம் தேதி நடக்கிறது. இதில் ஆண்கள் மட்டும் முதுநிலை மற்றும் இளநிலை பிரிவில் ஆங்கிலம், இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், ஐ.டி., கணிப்பொறியியல், புள்ளியியல் அல்லது பி.சி.ஏ., எம்.சி.ஏ.,வில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 மேலும், மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பி.எட்., பயின்று 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மனுதாரர்கள் இளநிலை பட்டதாரிகள் 1995-2000 வரையிலான காலத்திலும், முதுநிலை பட்டதாரிகள் 1992-2000 வரையிலான காலத்திலும் பிறந்திருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு முகாமில் தகுதியுள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளம் மூலமும், 0423-2444004 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: