தலைவாசல் மார்க்கெட்டில் கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு

ஆத்தூர், செப்.20: தலைவாசல் காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி வரத்து அதிகரிப்பால், ஒரு கட்டு ₹10க்கு விற்பனையானது.   
தலைவாசல் தினசரி மார்க்கெட்டிற்கு தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொத்தமல்லி, கருவேப்பிலை அதிக அளவில் நேற்று விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதே ேபால் விழுப்புரம், நெய்வேலி, சிதம்பரம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் கொத்தமல்லி, கருவேப்பிலையை கொள்முதல் செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் கொத்தமல்லி கட்டு ₹20 வரை விற்பனையானது. நேற்று வரத்து அதிகரித்ததால், கட்டு ₹10க்கு விற்பனையானது. மேலும், கருவேப்பிலை கிலோ ₹30க்கு விற்பனையானது.

Tags :
× RELATED பள்ளி,கல்லூரி வாகனங்களில் கேமரா பொருத்த அறிவுறுத்தல்