கூட்டுறவு சங்க மோசடி வழக்கில் 22 ஆண்டாக தேடப்பட்டவர் விமான நிலையத்தில் கைது

சென்னை: நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றியவர் தாமரை செல்வன் (55). இவர், பணியின்போது, போலியாக கையெழுத்து போட்டு, பண மோசடி செய்ததாக, நாகை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த 1997ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும், தாமரை செல்வனை கைது செய்து விசாரிக்க முடிவு செய்தபோது, அவர் தலைமறைவானார். கடந்த 22 ஆண்டுகளாக போலீசார் அவரை தேடி வந்தனர். மேலும், அவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்ததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக எஸ்பி அறிவித்தார்.
Advertising
Advertising

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல தாமரை செல்வன் வந்தார். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபோது, தேடப்படும் குற்றவாளி என தெரிந்ததால், அவரை உடனே கைது செய்து தனி அறையில் அடைத்தனர். பின்னர், நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள், சென்னைக்கு விரைந்துள்ளனர்.

Related Stories: