×

அதியமான் மெட்ரிக் பள்ளியில் சீனிவாசன் நினைவு சொற்பொழிவு

ஊத்தங்கரை, செப்.19: ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நல்லாசிரியர் நா.சீனிவாசனின் நினைவாக வல்லமை தாராயோ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்தார். சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவர் மல்லிகாசீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், பள்ளி முதல்வர் கலைமணி சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு சொற்பொழிவாளர் பேராசிரியர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன் வல்லமை தாராயோ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அதில் மகாபாரத கதைகள், பகவத் கீதை, வள்ளுவன், பாரதி, அப்துல் கலாம் ஆகியோரை மேற்கோள் காட்டிப் பேசினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் விழிப்புணர்வு கருத்துக்களையும், தத்துவக் கதைகள் மூலம் எடுத்துரைத்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.


Tags : Srinivasan Memorial Lecture ,Adhiyaman Matric School ,
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்