×

நல வாரியங்களில் ஆதார் எண்ணை இணைக்க வரும் 30ம் தேதி கடைசி நாள்

கிருஷ்ணகிரி, செப்.19: தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நலவாரியங்கள் அமைத்து அதில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும், வாரிசுதாரர்களுக்கும் கல்வி, கண் கண்ணாடி, மகப்பேறு, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவிகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு பெற்ற ‘ உறுப்பினர்கள் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிருஷ்ணகிரி எல்ஐசி அலுவலகம் அருகே உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அருகில் உள்ள முகவரிக்கு அனுப்பலாம் அல்லது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதார் பெட்டியிலும் போடலாம். இதுவரை இணைக்கப்படாத உறுப்பினர்கள் ஆதார் எண்ணை தங்கள் பதிவுடன் வரும் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : welfare boards ,
× RELATED ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்க செப்.30-தேதி வரை அவகாசம்