×

கடமலையில் சாக்கடை கழிவால் நோய் பரவும் அபாயம்

வருசநாடு, செப்.17: கடமலைக்குண்டு கிராமத்தில் சாக்கடை கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி -வருசநாடு சாலையில் சாக்கடை கழிவுகள் கடந்த சில நாட்களாக தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளது. மேலும் சாக்கடை கழிவுகள் தேங்குவது காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் வழுக்கி விழுந்து காயப்படுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sea ,
× RELATED விந்தணு மூலம் கொரோனா பரவும் அபாயம் : ஷாக் கொடுக்கும் சீன விஞ்ஞானிகள்!!