ஸ்டான்லி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிப்பு

தண்டையார்பேட்டை, செப். 17: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை உலக தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்று காலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மருந்து சீட்டு வழங்கும் இடத்தில் உலக தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் விதமாக இதில், ஆர்.எம்.ஓ.ரமேஷ், பேராசிரியர்கள் நெல்லையப்பன், கண்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: