×

போச்சம்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

போச்சம்பள்ளி, செப்.17: போச்சம்பள்ளியில் ₹50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை பர்கூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கிராம ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ₹50 லட்சம் மதிப்பில் போச்சம்பள்ளி அருகில் உள்ள தமோதரஅள்ளி ஊராட்சி மொள்ளப்பட்டியிருந்து பிள்ளையார் கோயில் வரை, மொள்ளப்பட்டியிலிருந்து தேவீரஅள்ளி வரை சாலை அமைக்கும் பணியை பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் அருள்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் விமலா சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் முருகன், ஊராட்சி செயலாளர் முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சந்திரன், தீர்தமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் சாராயம் காய்ச்ச வேலாமர பட்டைகள் உறிப்பது அதிகரிப்பு