×

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

தர்மபுரி, செப்.17: பாலக்கோடு அடுத்த கரகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய  மகன் சக்திவேல் (25), தொழிலாளி. கடந்த சில நாட்களாக சக்திவேல் தனக்கு  திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் பெண்  கிடைக்கவில்லை. இதனால் விரக்தியுடன் காணப்பட்ட சக்திவேல் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  பாலக்கோடு போலீசார், சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி...