ஓசூர் சாந்தி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

ஓசூர், செப்.11: ஓசூர் சாந்தி நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஓசூர் சாந்தி நகர் பகுதியில் கடைகள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், மெட்ரிக் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை உள்ளதால், இந்த பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. ஓசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்தும் வீதிகள் குண்டும், குழியுமாகவும், கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால், சாலையில் கழிவு நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும், குப்பை தொட்டி இல்லாததால், வீதிகளில் கொட்டப்படும் குப்பைகளில் ஈக்கள், கொசுக்கள் மொய்த்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளை கேட்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: