அகற்றப்பட்ட மின்கோபுரத்தால் விபத்து அபாயம்

போச்சம்பள்ளி, செப்.11: போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலை அகலப்படுத்தப்பட்டு உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு புறத்திலும் சாலைகள் வெளிச்சமாக இருந்தததால், பொதுமக்கள் அச்சமின்றி நடமாடி வந்தனர். மேலும், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வந்தனர். இதனால், வாகனங்கள் விபத்து அபாயம் இன்றி சென்று வந்தன. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் லாரி மோதியதில், உயர் மின் கோபுரம் சாய்ந்ததல், மின்கம்பம் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சாலை விரிவாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மின்வேகத்தில் செல்கின்றனர். இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 4 சிக்னல்களும் உடைந்ததால் அடிக்கடி  சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் போச்சம்பள்ளி நான்கு சந்திப்பு சாலையில் ரவுண்டானா அல்லது வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: