பராமரிப்பின்றி சிதிலமடைந்த விகேபுரம் மயான சாலை சீரமைக்கப்படுமா?

வி.கே.புரம், செப்.10:  வி.கே.புரத்தில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த  மயான சாலையால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதிலும், விவசாயிகள் விளைபொருட்களை கொண்டுசெல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.வி.கே.புரத்தில் அனைத்து சமுதாயத்திற்கும் சொந்தமான மயானம் கொட்டாரம் பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதற்காக மெயின் ரோட்டிலிருந்து சுமார்  1 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களுக்கு உரம் கொண்டு செல்வதற்கும் விளைந்த பயிர்களை கொண்டு செல்வதற்கும் மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களும் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றன.  ஆனால் இந்த வழிப்பாதையிலுள்ள தேவசகாயபுரத்திற்கு அருகிலுள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல ஆண்டுகளாகியும் இந்த சாலை சீரமைக்கப்படாததால் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்லும் வாகனங்கள் மயானத்திற்கு செல்ல சிரமப்படுவதோடு விவசாயிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, இனியாவது சம்பந்தபட்ட துறையினர் இச்சாலையை உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Related Stories: