சங்கரன்கோவிலில் இன்று பத்ரகாளியம்மன் கோயில் கொடை விழா

நெல்லை, செப். 10: சங்கரன்ேகாவில் பெரியார்தெரு காட்டுநாயக்கன் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது. சங்கரன்ேகாவில் பெரியார்தெரு காட்டுநாயக்கன் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், மாரியம்மன், கோட்டமலை கருப்பசாமி, மொட்டை பேச்சியம்மன், வைரவன், கொம்புமாடன் ேகாயில் கொடை விழா திருவிளக்கு பூஜையுடன் நேற்று துவங்கியது. கொடை விழாவில் இன்று( 10ம்தேதி) காலை 5.30 மணிக்கு வருஷாபிஷேகம், கணபதி ஹோமம், நடக்கிறது. காலை 6மணிக்கு பால்குடம், அம்மன் சப்பரம் வீதியுலா நடக்கிறது. 9மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 11 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. நண்பகல் 12மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. மாலை 3மணிக்கு முளைப்பாரி, அக்னிசட்டி வீதியுலா நடக்கிறது. மாலை 6மணிக்கு காளியின் சிறப்பு குறித்து ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இரவு 9மணிக்கு பொங்கலிடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது. நாளை (11ம்தேதி) காலை 9மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 4மணிக்கு முளைப்பாரி கரைத்தல், 5மணிக்கு சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Related Stories: