மனைவியை கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரருக்கு ஆயுள் தண்டனை : மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மனைவியை கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரருக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சென்னை கொண்டித்தோப்பு தீயணைப்புத்துறை குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சரண்யா. செந்தில்குமார் தீயணைப்புத்துறையில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வீட்டில் சரண்யா இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சரண்யாவின் உறவினர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், செந்தில்குமாருக்கும், ராணி  என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த சரண்யா கணவனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள மனைவி சரண்யாவை கொலை செய்ய செந்தில்குமார் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, வீட்டில் இருந்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசார், அவரை கொலை வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவியை கொன்ற செந்தில்குமாருக்கு ஆயுள்  தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: