கல்லூரி மாணவி கடத்தல்

கிருஷ்ணகிரி, ஆக.22: காவேரிப்பட்டணம் நரிமேடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 19 வயது மகள், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி, மாலையில் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கம் விசாரித்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கேஸ் ஏஜென்சியில் வேலை பார்க்கும் முனிராஜ்(31) என்பவர், மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி