மொபட் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு வலை

சென்னை: ஆலந்தூரை சேர்ந்த நாகூர் மீரான் (65), நேற்று பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடிக்கு  தனது மொபட்டில் சென்றார். அங்குள்ள ஒரு கடையின் முன் மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே  வந்து பார்த்தபோது, அவரது மொபட் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ‘‘மற்றொரு மொபட்டில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த ஒரு பெண்,  மீரான் மொபட்டை நோட்மிட்டு செல்வதும், சிறிது நேரத்தில் நடந்து வந்து, நாகூர் மீரான் மொபட்டை கள்ளச்சாவி போட்டு திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த  பெண் ஓட்டி வந்த மொபட்டை எங்கு நிறுத்தி விட்டு வந்து இந்த மொபட்டை திருடினார். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: