15 நாட்களில் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை, ஆக. 14: மதுரை அரசு மருத்துவமனையில், புற்றுநோய்க்கான இலவச சிகிச்சை இன்னும் 15 நாட்களில் அளிக்கப்படும் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐகோர்ட் கிளையில் தகவல் ெதரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த கார்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண்டுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புற்று நோய்க்கான சிகிச்சை பெறுகின்றனர். இந்த நோய் தொடர்பாக பல்வேறு பிரிவுகள் இருப்பதால், சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. ஆனால் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்ய ஸ்ேகன் வசதி மதுரை அரசு மருத்துவமனையில் இல்லை. இந்த வசதி இருந்தால் துவக்க நிலையிலேயே கண்டறிந்து பலரின் உயிரை காப்பாற்ற முடியும். இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டி யுள்ளது. எனவே, மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான ஸ்கேன் கருவியை நிறுவ உத்தரவிட வேண்டும் என மனு செய்தேன்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் ஸ்கேன் கருவியை ஒரு மாதத்திற்குள் நிறுவ வேண்டும் என கடந்த 2017 ஜன.2ல் உத்தரவிட்டனர். ஆனால், இன்று வரை நிறுவவில்லை. எனவே, சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு மருத்துவ மனை டீன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மருத்துவமனை டீன் வனிதா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிவில் மற்றும் மின்சாரப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இதனால், பெட் மற்றும் சிடி ஸ்கேன் செய்வதற்கான இயந்திரம் பொருத்தப் பட்டு உபயோகத்திற்கு தயார் நிலையில் உள்ளது. அணுசக்தி மருந்தை கையாள்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரேடியாலஜி பாதுகாப்பு அதிகாரிக்கான அனுமதி பெறப்பட்டுவிட்டது. மும்பையிலுள்ள அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்திடம் இருந்து மருத்துவப் பிரிவு நடத்து வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

இங்குள்ள அணுசக்தி மருத்துவப் பிரிவில் அணுசக்தி மருந்தை கையாள்பவரைக் கொண்டு இன்று முதல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முடிவுகள் அணுசக்தி ஒழுங்கு முறை வாரிய வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டதும், வழக்கமான மருத்துவத்திற்கு இறுதி அனுமதி கிடைக்கும். இந்த மாதிரி சோதனை நடத்தப்பட்டதிலிருந்து  அடுத்த 15 நாட்களில் இறுதி அனுமதி கிடைக்கும் எனத் ெதரிகிறது. இதிலிருந்து புற்றுநோய் பாதித்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புற்றுேநாய்க்கான ஸ்கேன் மற்றும் மருத்துவப் பிரிவின் பயன்பாடு குறித்து தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்.13க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: