வேப்பனஹள்ளியில் மழை இல்லாததால் கருகிய நிலக்கடலை

வேப்பனஹள்ளி, ஆக.14: வேப்பனஹள்ளி பகுதியில் மழை இல்லாததால் நிலக்கடலை செடிகள் கருகி வருகிறது. இதனால், நிலக்கடலை  பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. வேப்பனஹள்ளி, பேரிகை, சூளகிரி ஆகிய வட்டாரங்களில் ஏராளமான விவசாயிகள் பல நூறு ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். வேப்பனஹள்ளி பகுதியில் விவசாயிகள் பருவ மழையை நம்பி நிலக்கடலை பயிரிட்டனர். ஆனால், நடப்பாண்டில் பருவமழை பொய்த்து போனதால், நிலக்கடலை பயிர்கள் காய்ந்து கருகியது. பல ஆயிரம் செலவு செய்து பயிரிட்ட நிலக்கடலை போதிய தண்ணீரின்றி வறண்டதால், அவற்றை காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு வாங்கி தண்ணீர் ஊற்றினர். தண்ணீர் ஊற்றியும் நிலக்கடலையை காப்பாற்ற முடியாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags :
× RELATED உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து...