விரைவில் இடிக்கப்பட உள்ள யானைக்கவுனி மேம்பாலத்தை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை: யானைக்கவுனி மேம்பாலம் விரைவில் இடிக்கப்பட உள்ளதையொட்டி அந்த பணிகள் தொடர்பாக சென்னன மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.  ராயபுரம் மண்டலத்தில் உள்ள யானைக்கவுனி சாலையில் 50 மீ நீளத்தில் மேம்பாலம் ஒன்று உள்ளது. ரயில்வே துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாலத்தின் சாய்வுதளம் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இப்பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ரயில்வே துறை அலுவலர்களுடன் ஆணையாளர் பிரகாஷ்  ேநற்று ஆய்வு மேற்கொண்டார்.பாலத்தின் அருகே உள்ள மின்கோபுரங்களை மாற்றி அமைக்கும் பணியை  தமிழ்நாடு மின்சார வாரியம் செய்து வருகிறது. இதன்பிறகு பழைய பாலம் இடிக்கப்பட்டு 150 மீ நீளம் கொண்ட புதிய பாலம் கட்டும் பணியை ரயில்வே மேற்கொள்ளும்.

Advertising
Advertising

இந்த பணியின்போது சென்னை மாநகராட்சியின் சார்பில் 26.45 கோடி மதிப்பீட்டில் பாலத்தின் மேற்கு பகுதியில் 250 மீ மற்றும் கிழக்கு பகுதியில் 180 மீ நீளம் கொண்ட சாய்வுதளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் (பணிகள்) கோவிந்த ராவ், தலைமைப் பொறியாளர் (பாலங்கள்) இராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் (பாலங்கள்) பாலசுப்ரமணியம், ரயில்வே துறையின் உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி கோட்டப் பொறியாளர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: