அக்கொண்டப்பள்ளி அரசு பள்ளிக்கு ₹2 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி

தேன்கனிக்கோட்டை, ஜூலை 18:  அக்கொண்டப்பள்ளி நடுநிலைப்பள்ளிக்கு ₹2 லட்சம் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தளி.பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தளி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில், கெலமங்கலம் ஒன்றியம் அக்கொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ₹2 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் அக்ரஹாரம் கிராமத்தில் ₹1லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தளி.பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்சியில் கெலமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், பேரூர் பொறுப்பாளர் குமார், தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி, மாவட்ட விவசாய அணி ஸ்ரீதர், மாவட்ட தொமுச கோபாலகிருஷ்ணன், வர்தக அணி சின்னராஜ், முருகேசன், ஜகா, தேவராஜ், ரகுநாத், நட்ராஜ், முனிரெட்டி, சுதாகர், கிட்டண்ணா மற்றும் கட்சி நிர்வாகிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி...