×

சூளகிரி சின்னகொத்தூர் ஏரியில் தூர்வாரும் பணி துவக்கம்

சூளகிரி, ஜூலை 18:  சூளகிரி தாலுகாவில் உள்ள சின்னகொத்தூர் ஏரியை தூர்வாரும் பணியை தாசில்தார் தொடங்கி வைத்தார்.
சூளகிரி தாலுகாவில் உள்ள 42 ஊராட்சிகளில், 100க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தேங்கும் நீரால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால், இங்குள்ள குருமசப்படி ஏரி, பத்தலப்பள்ளி ஏரி, சானமாவு ஏரி, புக்கசாகரம், சின்னகொத்தூர் ஏரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரதான ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால், விவசாயம் பொய்த்து கால்நடைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சூளகிரி தாலுகா பகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளை தூர்வார, கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நேற்று, சூளகிரி தாலுகா பகுதிக்கு உட்பட்ட சின்னகொத்தூர் ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது. ஊரக வளர்ச்சி தணிக்கை அதிகாரி பழனிசாமி, சூளகிரி தாசில்தார் ரெஜீனா ஆகியோர் இப்பணியை தொடங்கி வைத்தனர். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜெபராஜ் சாமுவேல், விமல் ரவிக்குமார், வருவாய் அலுவலர் முருகன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு