வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அழைப்பு

சென்னை, ஜூலை 18: சென்னை மாநகராட்சியில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு  கட்டமைப்புகளை ஆய்வு செய்யவும், புதிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை  அமைக்கவும் 200 குழுக்களை அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி வார்டு வாரியாக சென்னை  மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய உதவி பொறியாளர்கள் இருவர், மாநகராட்சி  மற்றும் குடிநீர் வாரிய வரி வசூலிப்பவர்கள் இருவர், மாநகராட்சி சுகாதார  ஆய்வாளர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்த  குழு பணிகளை சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர்கள் அல்லது பகுதி பொறியாளர்  கண்காணிப்பாளர்கள். இவர்களை ஒருங்கிணைக்க 15 மண்டலங்களுக்கான  ஒருங்கிணைப்பு அலுவலராக தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு  பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த பணிகளை கண்காணிக்க  சென்னை மாநகராட்சியில் உள்ள 4 துணை ஆணையர்கள் மற்றும் 3 மண்டல துணை  ஆணையர்களுக்கு தலா 2 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வார்டுகளில் நடைபெற்று வரும்  மழைநீர் சேகரிப்பு பணிகளை கண்காணிக்கும் பணியை மேற்கொள்வார்கள். வார்டு ஒன்றுக்கு 1000 வீடுகள் வீதம் வரும் ஆகஸ்ட் 31ம்  தேதிக்குள் 2 லட்சம் வீடுகளில் ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு வசதிகளை  ஏற்படுத்தவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 அதன்படி அனைத்து குழுக்களும் வீடுவீடாக  சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின்போது மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளில் அவற்றை மேம்படுத்துவது மற்றும் மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளில் அவற்றை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். கடந்த வாரம் வரை 53,847 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு முன்வந்தால் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். வார்டு ஒன்றுக்கு 1000 வீடுகள் வீதம்  வரும் ஆகஸ்ட் 31ம்  தேதிக்குள் 2 லட்சம் வீடுகளில் ஆய்வு செய்து மழைநீர்  சேகரிப்பு வசதிகளை  ஏற்படுத்தவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து  வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: