எஸ்ஐ மகன் தற்கொலை

ஆவடி, ஜூலை 16; வேலை கிடைக்காத விரக்தியில் எஸ்ஐ மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முனுசாமி. ஓய்வுப்பெற்ற எஸ்ஐ. இவரது மகன் பிரசாந்த் (27). எம்பிஏ படித்துவிட்டு வேலைதேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பிரசாந்த் விரக்தியடைந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு முனுசாமி அவரது மனைவி ஆகியார் சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் பிரசாந்த் மட்டும் தனியாக இருந்துள்ளார்.  விரக்தியடைந்த நிலையில் பிரசாந்த், சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertising
Advertising

இதனிடையே புதுச்சேரியில் இருந்து பெற்றோர் செல்போனில் பேசியபோது எடுக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பக்கத்து வீட்டினருக்கு போன் செய்து விசாரித்தபோது பிரசாந்த் தற்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக சென்னை திரும்பினர்.தகவலறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரசாந்த் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: