கத்தியுடன் வந்த மாணவன் கைது

புழல், ஜூலை 16: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமாக திரிந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தனர். அவன், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவனை சோதனையிட்டனர். அப்போது, அவனது பேன்ட் பாக்கெட்டில் ஒரு அடி நீளம் கொண்ட மீன் வெட்டும் கத்தி இருந்தது. விசாரணையில், செங்குன்றம் அடுத்த காந்தி நகர் அம்பேத்கர் 5வது  தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், கல்லூரி மாணவன் என்பதும் தெரிந்தது. கல்லூரிக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. அவனை கைது செய்து, கல்லூரிக்கு செல்லும் போது ஏன் கத்தியை கொண்டு வந்தான், மாணவனுடன் வேறு யாராவது வந்தார்களா என பல்வேறு கோணங்களில் செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: