ராயனூர் முகாமை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் புதிய துணை மின் நிலையம் திறப்பு

கரூர், ஜூன் 25: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா நொய்யலில் ரூ.8.40 கோடி, அரவக்குறிச்சியில் ரூ.5.47 கோடி, உப்பிடமங்கலத்தில் ரூ.4.02 கோடி, புலியூரில் ரூ.4.09 கோடி மதிப்பீட்டில் துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். உப்பிடமங்கலம் துணைமின்நிலையத்தில் கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த துணை மின் நிலையங்களால் 62 கிராமங்கள் மற்றும் 150 குக்கிராமங்களும் பயனடைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் மேற்பார்வை பொறியாளர் வினோதன், செயற்பொறியாளர் செந்தாமரை, உதவி பொறியாளர் பிரபு தங்கராசு கலந்து கொண்டனர்.

Related Stories: