நாங்குநேரி யூனியனில் சுகாதார பணியாளர்களுக்கு 4 மாதமாக ஊதியம் நிறுத்தம்

நாங்குநேரி, ஜூன் 19: நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள், கிராம சுகாதாரப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 320 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தால் தங்களுக்கு பணிகள் மறுக்கப்படும் என அஞ்சுவதால் ஊழியர்கள் வெளியில் கூற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே நாங்குநேரி பகுதி கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையினை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: