புளியங்குடி பள்ளி மாணவர்கள் பசுமை சுற்றுலா

நெல்லை, ஜூன் 19:  புளியங்குடி கண்ணா  மெட்ரிக் பள்ளி உயிரியல் பிரிவு மாணவர்கள் பசுமை சுற்றுலா சென்றனர். பசுமையான சூழல் நிறைந்த இடங்கள், வயல்வெளிகள், விவசாய பண்ணைகளை பார்வையிட்டனர். ஆசிரியர்கள் முத்துச்செல்வி, முருகன்  ஆகியோர் பயிர் பெருக்கம் மற்றும் நோய் காரணிகள் குறித்த மாணவர்களின் கேள்விக்கு செயல்முறை விளக்கமளித்தனர். நெல் நடுதல் மற்றும் நெல் அறுவடை பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். விவசாயத்தின் இன்றைய நிலை மற்றும் அதன்  முக்கியத்துவத்தை இயற்கை ஆர்வலர் பாபு  மாணவர்களுக்கு விளக்கினார். வேளாண் சார்ந்த மேற்படிப்பு குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு  முதல்வர் செந்தில்நாதன் விளக்கமளித்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுபாஷ்கண்ணா செய்திருந்தார்.

Related Stories: