புகையிலை விற்றவர் கைது

சாத்தூர் அருகே, வெங்கடாசலபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில், அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் (52) என்பவரின் பெட்டிக்கடையில் தடை செய்யபட்ட புகையிலை 100 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக சுப்புராஜை கைது செய்தனர்.

Related Stories: