கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறை சார்பில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி, கலெக்டர் பிரபாகர் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது, இந்திய குடிமகன்/குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் என கலெக்டர் வாசிக்க, அனைவரும் அதை திருப்பி சொல்லி உறுதி எடுத்துகொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அசோக்குமார், பிஆர்ஓ சேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: