மேட்டூர் அருகே அரசு பள்ளியில் நாணய கண்காட்சி தொடக்கம்

சேலம், ஜூன் 14: சேலம் மேட்டூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று மன்றங்களும், பழங்கால நாணய கண்காட்சியும் துவக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மானத்தாள் நல்லாகவுண்டன்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் தொன்மை மன்றம், வரலாற்று மன்றம்,  பழங்கால நாணய கண்காட்சி போன்றவை துவக்கப்பட்டது. சேலம் வரலாற்றுச் சங்க பொதுச் செயலாளர் பர்னபாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தொன்மை மன்றம், வரலாற்று மன்றம் மற்றும் பழங்கால நாணய கண்காட்சி போன்றவற்றை துவங்கி வைத்தார்.

பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் தலைமை வகித்தார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சியாக ‘‘கற்கால மனிதர்களின் நடனம்’’ நடந்தது.  தொன்மை மன்றத்தின் தலைவராக தலைமை ஆசிரியர் கண்ணன், செயலராக சமூக அறிவியல் ஆசிரியை சரோஜா, மாணவ செயலராக மாணவி காவ்யா, வரலாற்று மன்ற செயலராக சமூக அறிவியல் ஆசிரியர் வைத்தியநாதன், மாணவ செயலராக குருசாமி, பழங்கால நாணய கண்காட்சி அமைப்பாளராக அறிவியல் ஆசிரியர் விஜயகுமார், துணை அமைப்பாளராக ரமேஷ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Related Stories: