ஓமலூரில் அமமுக ஆலோசனை கூட்டம்

ஓமலூர், ஜூன் 13: ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் எஸ்.கே.செல்வம் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்றதற்கான காரணங்களை கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: