சேலம் காவேரி மருத்துவமனை சாதனை முடக்குவாத நோயாளிக்கு அதிநவீன மூட்டுமாற்று ஆபரேஷன்

சேலம், ஜூன் 13: சேலம் சீலநாயக்கன்பட்டி காவேரி மருத்துவமனையில், வாலிபருக்கு 2 இடுப்பு மூட்டுகளுக்கும் மூட்டு மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டது. சேலம் சீலநாயக்கன்பட்டி காவேரி மருத்துவமனையின் தலைமை எலும்பு மூட்டு மாற்று ஆபரேஷன் நிபுணர் டாக்டர் செந்தில்ராஜன் கூறியதாவது: முடக்குவாதம் என்று சொல்லப்படுகின்ற மூட்டு நோய் 15-45 வயது வரை உள்ள இளம் வயது ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

இந்நோய் பொதுவாக முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பு இடுப்பு மூட்டுடன் இணையும் பகுதி ஆகியவற்றை அதிகம் பாதிக்கும். பாதிப்புக்குள்ளான எலும்பு மூட்டுகள் விரைவில் ஒன்றோடு ஒன்று இணைந்து, முதுகெலும்பு மற்றும் இடுப்பு மூட்டுகளின் அசைவுகள் வெகுவாக குறைந்து விடுவதால், குனிந்து நிமிரமுடியாமலும், எழுந்து நடக்க முடியாமலும் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பக்கட்டங்களில் உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலமாக நோயின் வீரியத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். முற்றிய நிலையில் ஆபரேஷன் மட்டுமே பலனளிக்கிறது.

இந்த வகையான முடக்குவாதம், மிக குறுகிய காலத்தில் மூட்டுகளை பாதிப்பதால், இளம்வயதிலேயே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முடங்கி விடுகின்றனர். தேய்ந்து போன இடுப்பு மூட்டுகளை, அதிநவீன செயற்கை இடுப்பு மூட்டுகளை கொண்டு ஆபரேஷன் செய்வதன் மூலம், பாதிக்கப்பட்ட இடுப்பு மூட்டுகள் இயல்பு நிலைக்கு திரும்பமுடியும். சேலம் காவேரி மருத்துவமனையில் உள்ள அதிநவீன உபகரணங்களை கொண்டு எளிதில் சுலபமாக ஆபரேஷன் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: