வங்கதேச கரன்சி ரூ.7.5 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த முகமது (28), மொய்தீன் (32) ஆகிய இரண்டு பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியறைக்கு அழைத்துச்சென்று ஆடைகளை களைந்து சோதனை நடத்தினர். இருவருடைய உள் ஆடைகளிலும் கட்டுக்கட்டாக வங்காள தேசத்தின் கரன்சிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.7.5 லட்சம். இதையடுத்து இருவரது பயணத்தையும் ரத்து செய்து, கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: