கத்தரிப்புலம் காமாட்சியம்மன் கோயில் திருவிழா தீமிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்

வேதாரண்யம், ஜூன் 13: வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. வேதாரண்யம் அருகேயுள்ள கத்தரிப்புலத்தில் புகழ்பெற்று விளங்கும் காமாட்சியம்மன் கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கி நாள்தோறும் நடந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்த உபயதாரர்களால் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அம்பாள் அன்னம், பூதம், யாழி, கிளி, குதிரை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், மாவிளக்கு போட்டும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இரவு அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் விளையாட்டுடன் தீமிதி நிகழ்ச்சியும் நடந்தது. மறுநாள் விடையாற்றியுடன் விழா முடிவுற்றது. விழா ஏற்பாடுகளை கோயிலின் அறங்காவலர்கள் வரதராஜன், அருளானந்தன், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், சரவணகுமார், கணேசன், துரைராசு உள்ளிட்ட கிராம வாசிகள் செய்திருந்தனர்.

Related Stories: