தோகைமலை அருகே கீழவெளியூரில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

தோகைமலை, ஜூன் 13: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, பிடிஏ, மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பாக மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இடும்பன் தலைமை வகித்தார். பிடிஏ தலைவர் சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது கீழவெளியூர், இந்திராநகர், பாரதிநகர், காமராஜ் நகர், பொியகளத்துப்பட்டி, மதுராநகர், பிள்ளையார்கோவில்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, திருமலை நகர், எம்ஜிஆர் நகர் உள்பட முக்கிய வீதிகள் வழியாக வீடுவீடாக சென்றனர்.

இதில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது, மாணவர்கள் இடைநின்றலை தடுப்பது, அரசு பள்ளிகளில் குழந்தைகள் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தமிழக அரசு வழங்கும் சலுகைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை இந்த ஆண்டிற்கான முதல் வகுப்பிற்கு குழந்தைகளின் வீட்டிலேயே பதிவேட்டில் பதிவுசெய்து சேர்க்கை செய்தனர். இந்த பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், சமூகஆர்வலர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: