பாலையம்பட்டி ஊராட்சியில் பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி

அருப்புக்கோட்டை, ஜூன் 11: பாலையம்பட்டி ஊராட்சியில் பாதியில் நிற்கும் சாலைப் பணியால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், ராமலிங்கா நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலையம்பட்டி ஊராட்சியில் ராமலிங்கா நகர், போஸ்டல் காலனி, புளியம்பட்டி நெசவாளர் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகள் உருவாகி பல ஆண்டுகளாகியும் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

மதுரை ரோட்டியிலிருந்து  விசைத்தறி பஞ்சாலை நிறுவனம் செல்லும் ரோட்டில் சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால், டூவீலர்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை கடந்துதான் சிலோன் காலனி, இபி காலனி, பசும்பொன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஜல்லிக்கற்கள் கொட்டியுள்ளதால், போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை வழியாக சென்று வருகின்றனர். மேலும், இப்பகுதியில் போதிய வாறுகால் வசதியில்லை.  ஏற்கனவே இருந்த வாறுகால்கள் சேதமடைந்து கழிவுநீர் தேங்குகிறது.  இருபுறமும் வாறுகால் அமைக்காமல் சாலை அமைக்கின்றனர். இதனால், ரோட்டில் கழிவுநீர் தேங்கும் அவலம் ஏற்படும்.

Related Stories: