விருதுநகர், மே 28: கேண்டீனில் பொருட்கள் குறைவாக வருவதால், ராணுவ வீரர்கள் விடிய, விடிய காத்திருக்கும் பரிதாபம் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் கல்லூரி சாலையில் ராணுவத்தினர் பொருட்கள் வாங்கும் கேண்டீன் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால், மாதக் கடைசியில் குறைந்த அளவிலேயே பொருட்கள் வருவதாக கூறப்படுகிறது. இதனால், முன்னதாக வருபவர்களுக்கே பொருட்கள் கிடைக்கின்றன.